உலகம்

பாகிஸ்தான் விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை எவ்வளவு? வெளியான அதிர்ச்சி தகவல்!

Summary:

pakistan flight accident death


பாகிஸ்தானில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் சமீபத்தில் உள்நாட்டு விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது.

பாக்கிஸ்தானில் லாகூரில் இருந்து கராச்சி நோக்கி சென்ற உள்நாட்டு விமானம் கராச்சியில் தரையிறங்கும் போது தீ பற்றி எரிந்து விழுந்தது.  இந்த விமானத்தில் 99 பயணிகள் 8 ஊழியர்கள் பயணித்துள்ளனர்.

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் லாகூரில் இருந்து கராச்சி வந்தது. அப்போது கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கும்பொழுது, விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

விமானம் விபத்துக்குள்ளானதில், பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement