பாகிஸ்தான்: பிளாஸ்டிக் பையில் சமையல் கேஸ் விற்பனை... அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி!!



Pakistan Cooking gas stored in plastic bag

பாகிஸ்தானில் பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அந்நாட்டு மக்கள் அன்றாட வாழ்வில் பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்‌. அதிலும் சமையலுக்கு பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் பிளாஸ்டிக் பையில் கேஸ் நிரப்பி செல்லும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் மிகவும் தவித்து வருகின்றனர். கைபர் பக்துங்வா மாகாணத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறையால் மக்கள் பிளாஸ்டிக் பைகளிலில் கேஸ் நிரப்பி செல்லும் காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

ஒரு சிலிண்டர் பாகிஸ்தான் மதிப்பில் 10 ஆயிரம் ரூபாய் ஆவதால் 900 ரூபாய்க்கு விற்கப்படும் பிளாஸ்டிக் பையில் ஆபத்தான முறையில் கேஸ் சிலிண்டர் நிரப்பி செல்கின்றனர் பாகிஸ்தான் மக்கள்.