ஒரு நாளைக்கு ஒன்பது கோடி சம்பளம்; யார் அந்த செல்வந்தர்?..!

ஒரு நாளைக்கு ஒன்பது கோடி சம்பளம்; யார் அந்த செல்வந்தர்?..!



One day salary 9 crores

ப்ளூம்பெர்க்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஒருநாளில் அதிக சம்பளம் வாங்கும் நபர்கள் தொடர்பாக ஆய்வு நடத்தியது. அதன்படி பிரபல தொழிலதிபர் சர் கிரிஸ் ஹான் (Sir Chris Hohn) என்பவர் நாளொன்றுக்கு இந்திய மதிப்பில் 9 கோடி சம்பளம் வாங்குவது தெரியவந்துள்ளது.

கடந்த 1960-ஆம் ஆண்டு கார் மெக்கானிக் மகனாகப் பிறந்து பிரிட்டனில் அகதியாக குடியேறியவர், பின்னாளில் தனது கடின உழைப்பு காரணமாக டிசிஐ நிறுவனத்தை தொடங்கி, திறம்பட பணியாற்றியதை தொடர்ந்து உலகளவில் செல்வந்தர்கள் பட்டியலில் 405-வது இடத்தையும் அவர் பெற்றுள்ளார்.