ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் செய்த முதல் காரியம்.. இந்தியர் உட்பட 2 உயர் அதிகாரிகள் பணிநீக்கம்.!

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் செய்த முதல் காரியம்.. இந்தியர் உட்பட 2 உயர் அதிகாரிகள் பணிநீக்கம்.!


ned-segal-parak-agarwal-dismiss-form-twitter-elan-musk

 

உலக செல்வந்தர், தொழிலதிபர்களின் ஒருவரும், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சொந்தக்காரருமான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க இருப்பதாக பல மாதங்களுக்கு முன்னர் தகவல் பரவியது. இதுதொடர்பாக நடத்தப்பட்டு வந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முந்தைய காலங்களில் வெற்றி தோல்வி என இருந்து வந்தது. 

Ned Segal

எலான் மஸ்க் ட்விட்டர் அலுவலகத்திற்குள் கழிவறை கோப்பையுடன் புகுந்த வீடியோ வெளியாகி இருந்தது. இந்நிலையில், அவர் ட்விட்டர் தளத்தினை வாங்கிவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர் ட்விட்டர் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த பராக் அகர்வாலை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Ned Segal

மேலும், அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருந்த நெட் செகல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இருவரும் ட்விட்டர் நிறுவனத்தின் உயரதிகாரிகள் பொறுப்பில் இருந்த நிலையில், இருவரும் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.