வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
தலைக்கேறிய மதுபோதை! குழந்தை மீது படுத்து உறங்கிய தாய்! பின்னர் நடந்த விபரீதம்.
பிரித்தானியாவில் தாய் ஒருவர் மது போதையில் தனது குழந்தை மீது படுத்து உருண்டு புரண்டு அந்த குழந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியா நாட்டை சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ். இவரது மனைவி பெயர் மில்ட்டா. கணவன் மனைவி இருவரும் ஒரு இரவு பார்ட்டிக்கு சென்று விட்டு அளவுக்கு அதிகமான மது போதையில் வீட்டிற்கு திரும்பி உள்ளனர்.
வீட்டிற்கு திரும்பிய இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த நிலையில் ஆண்ட்ரூஸ் அருகில் இருந்த நாற்காலியில் சாய்ந்தவாறு உறங்கியுள்ளார். இதையடுத்து அவரின் மனைவி மில்ட்டா தனது குழந்தை அருகில் சோபாவில் படுத்து உறங்கி உள்ளார்.
அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்த மில்ட்டா தான் என்ன செய்கிறோம் என்று அறியாமல் குழந்தையின் மீது படுத்து தூங்கியுள்ளார். தாயின் பாரம் தாங்க முடியாமல் குழந்தை கதறி அழுவதைக் கண்டு கொள்ளாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார் மில்ட்டா.
குழந்தையின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளது. உடனே குழந்தையை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அக்கம்பக்கத்தினர் சேர்த்துள்ளனர்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தையின் தாய் மற்றும் தந்தை இருவரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.