புரட்டியெடுத்த சூறாவளியில் சிக்கி சின்னாபின்னமான மிஸிஸிபி; 23 பேர் பரிதாப பலி.!



mississippi-river-cyclone-23-died

அமெரிக்கா நாட்டில் உள்ள மிஸிஸிபி மாகாணத்தில் நேற்று பலத்த காற்றுடன், இடியுடன் கூடிய பயங்கர மழை பெய்துள்ளது. இந்த சூறாவளியின் தாக்கமானது 160 கி.மீ தொலைவு வரை சென்றுள்ளது.

இதனால் ஏற்பட்ட கனமழை மற்றும் சூறாவளியின் தாக்கமானது பல வீடுகளை சூறையாடியுள்ளது. இந்த சூறாவளியின் தாக்கம் காரணமாக தற்போது வரை 23 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். 

சூறாவளியால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்படுத்தி, மக்களுக்கு உதவி செய்ய அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சூறாவளி காரணமாக பல இடங்களில் மின்வெட்டு பிரச்சனை ஏற்பட்டு நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன.