இரண்டு வருடத்திற்கு முன்பே அமெரிக்க தேர்தலில் இவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என கூறியவர் வெளியிட்ட அறிக்கை.!

இரண்டு வருடத்திற்கு முன்பே அமெரிக்க தேர்தலில் இவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என கூறியவர் வெளியிட்ட அறிக்கை.!


mathurai-aadhinam-talk-about-america

அமெரிக்க அதிபர் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த நிலையில், அமெரிக்காவின் 46ஆவது புதிய அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யப்படவுள்ளார். அதேபோல் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழகத்தின் மன்னார்குடியை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அமெரிக்காவின் 46-வது அதிபராகவுள்ள ஜோ பைடனுக்கும், துணை அதிபராகவுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹரீஷுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. கமலா ஹாரிஸின் வெற்றியையும் அவரது சொந்த ஊர் மக்கள் மன்னார்குடியில் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும், மதுரை ஆதினம் வாழ்த்துகள் தெரிவித்துள்ளது. 

America

மதுரை ஆதினம், அமெரிக்காவின் புதிய அரசுக்கு டிரம்ப் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள மதுரை ஆதினம், அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராகப் பொறுப்பேற்க உள்ள கமலா ஹாரிஸ்க்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜோ பைடனும், கமலா ஹாரிசும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என இரண்டு வருடத்திற்கு முன்பே அமெரிக்கா வாழ் இந்தியர்களிடம் கூறி இருக்கிறேன். இருவரும் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய,அமெரிக்க ஆப்ரிக்கா,கறுப்பின மக்கள் வாழும் நாட்டு மக்களிடையே நல்ல ஒற்றுமை ஏற்படும் என நம்புகிறேன். அமெரிக்காவின் புது அரசுக்கு முன்னாள் அதிபர் டிரம்ப் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.