மிகப்பெரிய பாம்பை முகக் கவசமாக அணிந்து பேருந்தில் பயணம் செய்த நபர்.! வைரல் புகைப்படம்.

மிகப்பெரிய பாம்பை முகக் கவசமாக அணிந்து பேருந்தில் பயணம் செய்த நபர்.! வைரல் புகைப்படம்.


Man wear python as face mask photo goes viral on Internet

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் பேருந்தில் பயணம் செய்தபோது முககவசத்திற்கு பதிலாக பாம்பினை முககவசம் போல் பயன்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி மக்களும் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்தவாறு பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் வடமேற்குப் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மிகப்பெரிய பாம்பு ஒன்றை கவசம் போல் தனது கழுத்து மற்றும் வாய் பகுதியில் மூடியவாறு பேருந்தில் பயணம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் இதுபற்றி கூறும்போது, "குறித்த நபர் ஏதோ பேன்சியான  மாஸ்க் அணிந்து கொண்டிருப்பதாக தான் நினைத்ததாகவும், ஆனால் பேருந்து புறப்பட்ட போது தான் தெரிந்தது அது உண்மையான பாம்பு என்று குறிப்பிட்டுள்ளார். பேருந்து புறப்பட்ட போது அந்த நபரின் கழுத்துப் பகுதியை சுற்றி இருந்த அந்த பாம்பு பேருந்து இருக்கையில் ஊர்ந்ததாகவும் அந்த நபர் கூறியுள்ளார்".

 அதை புகைப்படம் எடுத்து சமூக வலை பக்கத்தில் பதிவிட அந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.