#JustIN: இந்துத்துவாவுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது..!
பசியால் சாகும் நிலைக்கு சென்ற ஏழை தொழிலாளி..! உயிரை காப்பாற்ற ஒருமுட்டை அரிசியை திருடியபோது கொடுமையாக தாக்கிய மக்கள்.! அதன்பின் நடந்தது..!
பசியால் சாகும் நிலைக்கு சென்ற ஏழை தொழிலாளி..! உயிரை காப்பாற்ற ஒருமுட்டை அரிசியை திருடியபோது கொடுமையாக தாக்கிய மக்கள்.! அதன்பின் நடந்தது..!

கொரோனா ஊரடங்கு காரணமாக தனது குடும்பம் பட்டினியில் செத்துக்கொண்டிருந்த நிலையில் நபர் ஒருவர் ஒரு மூட்டை அரசியை திருடியநிலையில் அந்த பகுதி மக்கள் அவரை அடித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா ஊரடங்கு காரணமாக தனது வேலையை இழந்தார். தகர குடிசையில் வாழ்ந்துவந்த அந்த நபரிடம் சேமிப்பு பணமோ அல்லது வருமானத்திற்கு வேறு வழியோ இல்லை. தனது நிலைமை அறிந்து ஏற்கனவே தனது மனைவி மற்றும் பிள்ளைகளை அவர் தனது மாமியார் வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.
தற்போது இவர் மட்டும் இங்கு தனியாக ஒருநேரம் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருந்தநிலையில் அந்த பகுதியில் உள்ள கடை ஒன்றில் ஒரு மூட்டை அரசியை திருடியுள்ளார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் அவரை கடுமையாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
குறிப்பிட்ட நபரின் வீடு மற்றும் அவரின் நிலையை பார்த்த போலீசார் அவர் பசியால் திருடியதை புரிந்துகொண்டு அவருக்கு அரிசி, செலவுக்கு கொஞ்சம் பணம் ஆகியவற்றை கொடுத்து அவரை விடுதலை செய்தனர்.