உலகம்

20 ஆண்டுகளாக கண்பார்வை இல்லாமல் அவதிப்பட்ட நபருக்கு காத்திருந்த அதிசயம்! அதிர்ச்சியில் மூழ்கிய மருத்துவர்கள்!

Summary:

Man got eyes power after 20 years

போலந்தில் வசித்து வந்தவர் ஜானுஸ் கோராஜ். அவர் கண்களில் ரெட்டினாவில் ஏற்பட்ட குறைபாட்டால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கண்பார்வை இல்லாமல் இருந்து வந்துள்ளார்.மேலும் இந்த குறைபாட்டினால் அவர் பணிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்துள்ளார் 

இந்நிலையில் சமீபத்தில் ஜானுஷ் சாலையில் நடந்து சென்ற போது எதிர்பாராத விதமாக அவர் மீது கார் ஒன்று மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 15 நாட்களில் அவரது உடல்நிலை குணமடைந்தது. 

அதிலும் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ஜானுஷுக்கு தற்போது கண்பார்வை தெரிய துவங்கியுள்ளது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில்,  ஜானுஷ்க்கு உடலில் ஏற்பட்ட காயத்திற்கு மட்டுமே சிகிச்சை எடுத்து வந்தோம். அவரது கண் பார்வை குறித்து நாங்கள் எதுவும் செய்யவில்லை.

மேலும் அவருக்கு சிகிச்சையின்போது anticogulant மருந்துகள் கலந்து கொடுத்தோம். ஒருவேளை இதுவே அவரது கண் பார்வைக்கு காரணமாக இருக்கலாம். அதுமட்டுமின்றி  அவரது காயங்கள் சரியாக அதிக நாட்கள் ஆகும் என்ற நிலையில் 15 நாட்களிலேயே குணமடைந்துள்ளார் என ஆச்சரியத்துடன் கூறியுள்ளனர். மேலும் அவர் தற்போது தான் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனையிலேயே காவலராக பணிபுரிந்து வருகிறார். 


Advertisement