நடிகர் ரியாஸ் கானின் மருமகள் வளைகாப்பு; நேரில் வந்து வாழ்த்திய திரைபிரபலங்கள்.!
குடிபோதையில் உரிமையாளர் சாலையில் படுத்துக் கொண்டிருந்தார்..! பின்னர் நாய் என்ன செய்தது தெரியுமா..? அனைவரும் திகைத்துப்போனார்கள்..!

கடந்த 2018 ஆம் ஆண்டு கொலம்பியாவில் நடந்த சுவாரசியமான சம்பவங்களில் ஒன்றுதான் இந்த பதிவு.
நபர் ஒருவர் தலைக்கேறிய குடிபோதையில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அந்த நபருடன் அவர் வளர்க்கும் நாயும் கூட வந்தநிலையில் தனது எஜமானர் கீழே விழுந்ததும் அந்த நாய் அவருக்கு பாதுகாப்பாக அங்கையே நின்றுள்ளது.
சாலையில் விழுந்தவரை மக்கள் எழுப்ப முயற்சிகும்போதெல்லாம் தனது எஜமானர் அருகில் நின்றுகொண்டு மக்களை பார்த்து குறைத்து அவர்களை அங்கிருந்து விரட்டியுள்ளது அந்த நாய். மக்கள் எவ்வளவோ முயற்சித்தும் நாய் அவர்களை தனது எஜமானர் அருகில் விடவே இல்லை.
இறுதியில் போலீசார் அந்த இடத்திற்கு வந்து நாயை விரட்டி, அந்த நபரை எழுப்ப முயற்சி செய்துள்ளனர். ஆனால், அவர்களையும் அந்த நாய் அருகில் விடவே இல்லை. தனது குடிகார எஜமானர் அருகில் நின்றுகொண்டு அவரை தனது நாவினால் வருடிவிடவும், அருகில் வருபவர்களை விரட்டியும் விட்டுள்ளது அந்த நாய்.
அங்கு இருந்த மக்கள் நாயின் இந்த அன்பைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.