லெபனானில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் ஹசன் தியாப் ராஜினாமா.!

லெபனானில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் ஹசன் தியாப் ராஜினாமா.!


lebanon-blasts-prime-minister-hassan-tiyap-resigns

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்துக்கு பொறுப்பேற்று அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டதை அடுத்து அதிக வெப்பம் வெளியேறி எதிர்பாராத விதமாக கடந்த 4 ஆம் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்ப்பட்டது. 

Lebanan

அந்த விபத்தில் 3 லட்சம் பேர் தங்களது வீடுகளை இழந்தனர், 160 பேர் பலியாகினர். 6000 பேருக்கு படுகாயம் ஏற்ப்பட்டது. இச்சம்பவத்தால் கோபமான அந்நாட்டு மக்கள் உடனே பிரதமர் ஹசன் தியாப் மற்றும் அவரது அமைச்சரவையை சகாக்களை உடனே பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

அதனையடுத்து அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் அரசியலுக்கு வரும் முன், பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர் ஆவார்.