கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: இரண்டு வாரங்களுக்கு பொது விடுமுறை!

Leave for Corona virus


Leave for Corona virus

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக குவைத்தில் இரண்டு வாரங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள், திரையரங்கங்களுக்கு விடுமுறை அறிவித்து குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது. 

 சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்தியா உள்பட 104 நாடுகளில் பரவியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் இந்தியாவிலும், கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகிறது.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸால், இதுவரை உலகம் முழுவதும் 4000 கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

Coronaw

கொரோனா வைரஸ் குவைத் நாட்டிலும் பரவி வருகிறது. இதன்காரணமாக குவைத்தில் மார்ச் 26-ம் தேதி வரை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், திரையரங்கங்களுக்கு விடுமுறை அறிவித்து குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது. 

மேலும், குவைத் நகரின் விமான சேவை  2 வாரங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் முழுவதும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.