உலகம் லைப் ஸ்டைல்

கிச்சுக்கிச்சு மூட்டியதும் குழந்தை போலச் சிரிக்கும் அதிசய மீன்!! வைரல் வீடியோ இதோ..

Summary:

கிச்சு கிச்சு மூட்டினால் சிரிக்கும் மீன் ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

கிச்சு கிச்சு மூட்டினால் சிரிக்கும் மீன் ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஜெஃப்ரி டாடர் என்ற மீனவர் அமெரிக்காவில் பாஸ்டன் மாகாணத்திற்கு உட்பட்ட கேப் கோட் வளைகுடா பகுதியில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அவர் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமான தோற்றம் கொண்ட மீன் ஒன்று ஒன்று அவரது வலையில் சிக்கியுள்ளது.

குழந்தைபோல் மல்லாக்க படுத்துக்கொண்டு அந்த மீன் போஸ் கொடுக்கவே, ஜெஃப்ரி டாடர் அந்த மீனை கிச்சு கிச்சு மூட்டியுள்ளார். அப்போது அந்த மீன் குழந்தை சிரிப்பது போல வாயை திறந்து பார்ப்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

பார்ப்பதற்கு அந்த மீன் சிரிப்பதுபோன்று இருந்தாலும், அந்த மீன் உயிருக்குப் போராடுவதாக சில பார்வையாளர்கள் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது உலகளவில் வைரலாகிவருகிறது.


Advertisement