வடகொரியா அதிபருக்கு என்ன ஆச்சு?? பலமடங்கு உடல் எடை குறைந்து எப்படி இருக்கார் பாருங்க.!! வைரல் வீடியோ..

வடகொரியா அதிபருக்கு என்ன ஆச்சு?? பலமடங்கு உடல் எடை குறைந்து எப்படி இருக்கார் பாருங்க.!! வைரல் வீடியோ..


Kim Jong Un video after apparent weight loss goes viral

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல் எடை குறைந்து காணப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

உலகளவில் அதிகம் விவாதிக்கப்பட கூடிய தலைவர்களில் ஒருவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். அதற்கு காரணம் வடகொரியாவில் நடக்கும் வினோத சட்டங்களும், அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலையும்தான். கடந்த ஆண்டுகூட, அவர் இறந்துவிட்டதாகவும், அவரை பற்றிய எந்த தகவலும் இல்லை என உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

பின்னர் பொதுவெளியில் தோன்றி, தன்னை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அதிபர் கிம் ஜாங் உன். இந்நிலையில் மீண்டும் அவரைப்பற்றிய சலசலப்பு ஒன்று உலகம் முழுவதும் வைரலாகிவருகிறது.

சமீபத்தில் வடகொரியாவில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அதிபர் கிம் ஜாங், வழக்கத்தைவிட பலமடங்கு உடல் எடை குறைந்து காணப்படுகிறார். இதனால் அவருக்கு ஏதோனும் உடல்நல கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்ற தகவல் தற்போது வைரலாக தொடங்கியுள்ளது.

அதேநேரம், அவர் தானாகவே உடல் எடையை குறைத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.