இந்தியா உலகம்

இரவில் நடந்த பயங்கரம்.. இரத்த வெள்ளத்தில் மிதந்த மகள்.. கதறிய பெற்றோர்.. நடந்தது என்ன?..!

Summary:

கேரளாவை பூர்வீகமாக கொண்ட 19 வயது பெண், அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிசூட்டில் பரிதாபமாகி பலியாகினர். 

கேரளாவை பூர்வீகமாக கொண்ட 19 வயது பெண், அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிசூட்டில் பரிதாபமாகி பலியாகினர். 

கேரளாவில் உள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தை சார்ந்தவர் போபன் மேத்யூ. இவரது மனைவி வின்சி. இவரது மகள் மரியம் சூசன் மேத்யூ. இவர்கள் தற்போது அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாணத்தின் மாண்ட்கோமரியா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். 

கடந்த திங்கட்கிழமை இரவு நேரத்தில் குடும்பத்தினர் அனைவரும் உறங்கிக்கொண்டு இருந்த நிலையில், மேல்தளத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றதாக தெரியவருகிறது. இதில், வீட்டிற்குள் உறங்கிக்கொண்டு இருந்த மரியம் சூசன் மேத்யூவின் மீது குண்டு பாய்ந்துள்ளது. 

மகள் ஒரு அறையிலும், தந்தை - தாய் ஒரு அறையிலும் என இருந்ததால், பெற்றோர்கள் எங்கோ வெளியே துப்பாக்கி சூடு நடந்து இருக்கலாம் என எண்ணி உறங்கியுள்ளனர். மறுநாள் காலையில் பெற்றோர்கள் மகள் நீண்ட நேரமாக அறையில் இருந்து வெளியே வராமல் இருந்ததையடுத்து, அவரின் அறைக்குள் சென்று பார்க்கையில் மரியம் சூசன் மேத்யூ இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து இருந்துள்ளார். 

இந்த தகவல் உள்ளூர் காவல் துறையினருக்கு தெரியப்படுத்தவே, காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் வரை மஸ்கட்டில் இருந்த போபனின் குடும்பம், மகளின் உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றுள்ளது. மேல் படிப்பை சொந்த நாட்டில் மேற்கொள்ள விருப்பப்பட்டு இருந்த மரியம் சூசன் அமெரிக்காவில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


Advertisement