BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
காதலியின் அடகுவைத்த நகையை திருப்ப ஏடிஎம்-ல் கொள்ளை முயற்சி; இளைஞர் அதிர்ச்சி செயல்.!
காதல் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒருசிலர் தவறான வழியில் சென்று வாழ்க்கையை இழக்கின்றனர்.
அபாய ஒலி எழும்பியது
கேரளா மாநிலத்தில் உள்ள ஆலப்புழா பகுதியில் செயல்பட்டு வரும் ஏடிஎம் ஒன்றை, இளைஞர் ஒருவர் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தார். அப்போது, அபாய ஒலி எழும்பிய காரணத்தால், இளைஞர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
இதையும் படிங்க: ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட ப்ளஸ்1 மாணவர் & மாணவி; காரணம் என்ன?.!
150 கேமிரா பதிவுகள் ஆய்வு
இதுதொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு புகார் சென்ற நிலையில், காவல்துறையினர் சுமார் 150 க்கும் அதிகமான கேமிராக்களை ஆய்வு செய்து அபிராம் என்ற இளைஞரை கைது செய்தனர்.

ATM File Pic
விசாரணையில் அதிர்ச்சி தகவல்
விசாரணையில், காதலியின் அடகுவைத்த நகையை உடனடியாக திருப்ப பணம் தேவைப்பட்டதால், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இளைஞரை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 3 ஆண்டுகள் பாலியல் சித்திரவதை... நிர்வாண படங்கள் காட்டி மிரட்டல்.!! பி.டெக் மாணவிக்கு நேர்ந்த சோகம்.!!