காரின் டிக்கியை சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான வீடியோ.



kanja-in-car-driver-arrested

கொலம்பியாவில் வேகமாக சென்ற காரின் மீது சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை சோதனை செய்தபோது அதில் இரண்டு சவப்பெட்டிகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொலம்பியாவில் இருந்து வெனிசுலாவுக்கு செல்லும் பாதையில் போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக கார் ஓன்று வேகமாக சென்றுள்ளது. அதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் காரின் உள்ளே இரண்டு சவப்பெட்டிகள் இருந்துள்ளது.

Crime

சவப்பெட்டியை திறந்து பார்த்ததில் ஒரு பெட்டி காலியாகவும் மற்றொரு பெட்டி முழுவதும் கஞ்சா பொட்டலங்கள் நிரப்பியும் வைக்கப்பட்டிருந்தது. அதில் சுமார் 300 கிலோ எடையுள்ள 500 கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை போலீசார் கைப்பற்றினர். பின்னர் கார் ஓட்டுனரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.