ஜூலையில் சுனாமி தாக்குதல்! ரியோ டாட்சுகி கணிப்பால் ஜப்பானில் விமான முன்பதிவு வீழ்ச்சி! பயணங்களை ரத்து செய்த சுற்றுலா பயணிகள்! அச்சத்தில் மக்கள்...



japan-disaster-prediction-july5

ஜப்பானைச் சேர்ந்த தீர்க்கதரிசி ரியோ டாட்சுகி வெளியிட்ட ஒரு புதிய கணிப்பு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ‘தி ஃபியூச்சர் ஐ சா’ என்ற புத்தகத்தில் ஜூலை 5, 2025 அன்று ஜப்பானில் பெரும் பேரழிவு ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 5 அன்று ஏற்படும் பேரழிவு குறித்து ரியோ டாட்சுகி எச்சரிக்கை

அவரது புத்தகத்தில், "ஜூலை 5 அன்று கடலடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நிகழும். அதன் பிறகு கடல் கொதிக்கும். பெரும் குமிழ்கள் உருவாகும். இதனால் சுனாமி எழும். சுனாமி அலைகளால் நகரங்கள் கடலில் மூழ்கும்" என்று டாட்சுகி குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி வேகமாக பரவி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் மக்கள் பதில்

ஜப்பான் அரசு இதற்கான எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை. மியாகி மாகாண ஆளுநர் யோஷிஹிரோ முராய், "இது வெறும் வதந்தி. பாதுகாப்பு எச்சரிக்கை எதுவும் எமிடியலிடம் இருந்து வரவில்லை. பயணங்களை ரத்து செய்ய தேவையில்லை" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜூலை மாதம் இந்த தேதியில் பெரிய பேரழிவு ஏற்படுபோகுதாம்! இன்றுவரை 100% துல்லியமாக நடந்துள்ள ரியோ டாட்சுகி கணிப்புகள்!

விமானம் மற்றும் ஹோட்டல் முன்பதிவுகளில் பெரும் வீழ்ச்சி

இருப்பினும் இந்தக் கணிப்பு காரணமாக ஹாங்காங்கிலிருந்து ஜப்பான் நோக்கி செல்லும் விமான முன்பதிவுகள் 83% வரை குறைந்துள்ளன. அதேபோல் ஹோட்டல் முன்பதிவுகளும் குறைந்து வருவதாக சுற்றுலா அமைப்புகள் தெரிவித்துள்ளன.

டாட்சுகியின் பழைய கணிப்புகளின் உண்மை

ரியோ டாட்சுகி கடந்த காலத்தில் பல முக்கியமான நிகழ்வுகளை துல்லியமாக கணித்தவர் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்துகிறார்கள். 2011 டோஹோகு பூகம்பம், பிரின்சஸ் டயானா மற்றும் ஃப்ரெடி மெர்குரியின் மரணங்கள், கொரோனா தொற்று ஆகியவை முன்னதாகவே அவரால் கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தான் ஜூலை 5 தேதி தொடர்பான இந்த புதிய கணிப்பு மக்கள் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. உண்மையில் அந்த நாள் டாட்சுகி கணித்தபடி பேரழிவை வருமா அல்லது இது வெறும் பரபரப்பா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

 

இதையும் படிங்க: நீங்க இங்க வரணும்னு ஆசைப்படுறீங்களா..? முதல்ல இத பாருங்க! பிரபல நாட்டில் இருந்து வீடியோ வெளியிட்ட இந்திய பெண்!