உலகம் மருத்துவம்

கொரோனா வைரல் கோரத்தாண்டவம்! இங்கிலாந்தில் முதல் நபர் மரணம்!

Summary:

in uk first death for corona virus

இங்கிலாந்தில் கொரோனா வைரஸில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87-ஆக உயர்ந்துள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 36 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பிற நாடுகளுக்கும் பரவி உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.  

இந்த நோய் காரணமாக இங்கிலாந்தில் சில உயிரிழப்புகள் ஏற்படும் என்று இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 36 பேருக்கு பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் உயிரிழந்ததாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில்,  கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் முதல் உயிர்பலி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement