பச்சிளம்குழந்தையின் கைகளை கொதிக்கும் தண்ணீரில் அமுக்கிய வேலைக்கார பெண்! வீடியவவை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்!

பச்சிளம்குழந்தையின் கைகளை கொதிக்கும் தண்ணீரில் அமுக்கிய வேலைக்கார பெண்! வீடியவவை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்!


house keep injured child hand

மியன்மாரை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் சிங்கப்பூரில் இருக்கும் ஒரு வீட்டில் குழந்தையை பார்த்து கொள்வதற்கு வேளையில் சேர்ந்துள்ளார். அவர்  வேலைபார்த்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி இருவருமே, வேலைக்கு சென்றுவிடுவதால், குழந்தையை இவர் பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென்று குழந்தையின் கையில் தீக்காயம் ஏற்பட்டதால், உடனடியாக குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் குழந்தையின் கையில் இருந்த தீக்காயத்தை பார்த்தால், இது விபத்தாக ஏற்பட்டது போல தெரியவில்லை என மருத்துவர்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

fireஇதனையடுத்து  அவர்கள் தங்கள் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவை பார்த்த போது, அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் குழந்தையை வைத்து கொண்டிருந்த அந்த வீட்டு வேலைக்கார பெண், குழந்தையின் கையை அடுப்பில் கொதிக்கும் தண்ணீரில் வைத்து அழுத்தியுள்ளார். 

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர்கள் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.