வெளிநாடுகளில் தொடர்ந்து தாக்கப்படும் இந்து கோயில்கள்... வங்காளதேசத்தில் 14 இந்து கோயில்கள் மீது தாக்குதல்..!

வெளிநாடுகளில் தொடர்ந்து தாக்கப்படும் இந்து கோயில்கள்... வங்காளதேசத்தில் 14 இந்து கோயில்கள் மீது தாக்குதல்..!


Hindu temples are constantly being attacked abroad... Attack on 14 Hindu temples in Bangladesh..

வங்காளதேசத்தில் 14 இந்து கோவில்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. கோவில்களில் சாமி சிலைகளை பெயர்த்த மர்ம கும்பல் அவற்றை சாலைகளிலும், குளங்களிலும் வீசிச்சென்றுள்ளன. 

வெளிநாடுகளில் சமீப காலமாக இந்துக் கோவில்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. வருடத் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளில் இருக்கும் பிரசித்தி பெற்ற இந்து கோவில்களில் தாக்குதல்கள் நடந்துள்ளன. 

கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்து மூன்று கோவில்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களும் கோவில் சுவர்களில் எழுதப்பட்டிருந்தன. இந்நிலையில், வங்காளதேசத்தில் உள்ள 14 இந்து கோவில்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. 

இந்த சம்பவம் கடந்த ஞாயிறு அன்று நடந்துள்ளது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில்கள் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், சிந்தூர்பிந்தி என்ற இடத்தில் இருந்த கோவிலில் 9 சாமி சிலைகளும், பாரியா யூனியனில் காலேஜ்பாரா பகுதியில் இருக்கும் கோவிலில் 4 சாமி சிலைகளும் மற்றும் சரோல் யூனியனில் ஷாபாஜ்பூர் நாத்பாரா பகுதியில் உள்ள 12 கோவில்களில் 14 சாமி சிலைகளும் சிதைக்கப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.