ஐயோ... ஒரு நொடியில் உயிர் தப்பினாரா? நடிகர் கிரண் ராஜை கீழே தள்ளிய சிங்கம்! அதிர்ச்சி வீடியோ..!!!
மீண்டும் வெடிக்கும் ஹிஜாப் விவகாரம்..! ஹிஜாப் அணியாமல் செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனை... நாடு திரும்புவதில் சிக்கல்..!
ஈரானில் மக்சா அமினி மரணத்தை தொடர்ந்து ஹிஜாப்புக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இந்த ஹிஜாப் தொடர்பான பிரச்சனைகள் ஈரான் மட்டுமல்லாது மற்ற நாடுகளிலும் காணப்படுகிறது.
அந்த வகையில் ஈரானை சேர்ந்த வீராங்கனையான சாரா காதெம் கஜகஸ்தானில் நடைபெற்ற செஸ் போட்டியில் ஹிஜாப் அணியாமல் பங்கேற்றது ஈரான் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் சாரா நாடு திரும்பக் கூடாது என பலரும் தொலைபேசி மூலமாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் அவரது குடும்பத்தாருக்கும் தொலைபேசி மூலம் மிரட்டல் அழைப்புகள் வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சாரா தாயகம் திரும்பாமல் ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.