உலகம் வீடியோ

ஹோட்டலில் ஊனமுற்றவர் செய்த செயல், உலகில் யாருக்குமே கொடுக்கப்படாத அதிசய பில்! வைரலாகும் கண்கலங்க வைக்கும் வீடியோ!

Summary:

handicapped man help two hungry child in hotel

உலகில் பசியால் கோடிக்கணக்கானோர் வாடுவதும், சாவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சமீபத்தில் கூட 7 வயது சிறுமி ஒருவர் பசியால் உயிரிழந்தார். இந்நிலையில் பசியால் தவித்த சிறுவர்களுக்கு ஊனமுற்ற நபர் ஒருவர் உதவி செய்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அரபு நாட்டில்  ஊனமுற்ற நபர் ஒருவர் உணவகம் ஒன்றிற்கு சென்று  தனக்கு விருப்பமான உணவுகளை  தேர்வு செய்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

இதனை வெளியே நின்று பசியால் வாடிய இரண்டு குழந்தைகள் பார்த்து கொண்டிருந்துள்ளது. இதனை கவனித்த அந்த நபர் அந்த சிறுவர்களை  ஓட்டலின் உள்ளே வரவழைத்து அவர்களுக்கு பிடித்த உணவுகளை ஆர்டர் கொடுத்து சாப்பிட வைத்துள்ளார். மேலும் அவர்கள் சாப்பிடுவதை அமர்ந்து ரசித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கடைசியாக பில் கட்டும் போது அவருக்கு கொடுக்கப்பட்ட பில்லில் அரபி வாசகம் ஒன்று எழுதி கொடுக்கப்பட்டுள்ளது. 

அதாவது அதில் உமது மனித நேயத்துக்கான விலையை கணக்கிடும் அளவுக்கு எங்களிடம் கால்குலேட்டர் இல்லை! என எழுதப்பட்டிருந்தது.

மனிதநேயத்திற்கு சான்றாக உள்ள இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement