உலகம் வீடியோ

போனில் பேசியபடியே தண்டவாளத்தில் விழுந்த பெண்! மின்னல்வேகத்தில் வந்த மெட்ரோ ரயில்! வைரலாகும் பகீர் வீடியோ !

Summary:

girlfalling in train track in spain

ஸ்பெயின் நாட்டில் மெட்ரோ ரயிலுக்காக காத்திருந்த பெண் ஒருவர் போனில் பேசியபடியே சென்று ரயில் தண்டவாளத்தில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயினில் உள்ள மெட்ரோ டி மாட்ரிட் மெட்ரோ ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தபோது அவர் போனில் பேசியபடியே நடந்து சென்றுள்ளார். அப்பொழுது ரயில்வே அதிகாரிகளும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டே இருந்துள்ளனர். இருப்பினும் கவனிக்காமல் அவர் நேராக சென்று  மெட்ரோ ரயில் வரும் தண்டவாளத்தில் விழுந்துள்ளார். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிற பயணிகள் அவருக்கு உதவ ஓடுகின்றனர். 

ஆனால் அவர் விழுந்த சில நிமிடங்களிலேயே ரயில் ஒன்றும் வருகிறது. இந்த வீடியோவை மெட்ரோ டி மேட்ரிட் மெட்ரோ ரயில் நிலையம் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் அதில்  உங்கள் பாதுகாப்பிற்காக தான் கூறுகிறோம், நடைமேடையில் நடக்கும் போது செல்போனில் பேசுவதை தவிர்த்து விடுங்கள் எனவும் ஸ்பானிஸ் மொழியில்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் தண்டவாளத்தில் விழுந்த அந்த பெண்ணிற்கு பலத்த காயம் எதுவும் இல்லை, நலமாக இருக்கிறார் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


Advertisement