மனைவியை நடுரோட்டில் கடுமையாக தாக்கிய கணவர்; வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!Chennai Man Beaten Hardly Wife 

 

சென்னையில் வசித்து வரும் ரோஷன் என்பவர், இன்று காலை தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துகொண்டு இருந்தார். மேம்பாலம் ஒன்றில் தம்பதிகளுக்கு இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. 

இதனால் நடுவழியில் வாகனத்தை நிறுத்திய ரோஷன், தனது மனைவியை கடுமையாக தாக்கி இருக்கிறார். மேலும், அவரை பாலத்தில் இருந்து கீழே தள்ளிவிடவும் முயற்சித்துள்ளார். 

அவ்வழியாக சென்ற வாகனஓட்டி ஒருவர், இதனை வீடியோ எடுத்தவாறு பெண்ணுக்கு உதவி செய்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ரோஷனை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

 மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.