பிரபாஸின் கல்கி 2898 ஏடி திரைப்படம் வெளியாகும் தேதி; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!Prabhas Kalki Movie Release 

 

நடிகர்கள் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோன், துல்கர் சல்மான், திஷா பெதானி, ராஜேந்திர பிரசாத், பசுபதி உட்பட பலர் நடிக்க உருவாகும் திரைப்படம் கல்கி ஏடி (Kalki 2898 AD). 

இந்திய அளவில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகும் கல்கி திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி இருக்கிறார். இப்படம் ரூ.600 கோடி செலவில் தயாராகியுள்ளது. படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் அடுத்தகட்ட பணிகள் அனைத்தும் விறுவிறுப்புடன் நடைபெற்று நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையில், வைஜயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகவுள்ள கல்கி திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் உலகளவில் ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகிறது.