அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடும் அஜித்; தொழில்நுட்பத்துடன் எடிட் செய்யப்பட்ட வைரல் வீடியோ இதோ.!Deepfake AI Technology for Ajith Dance on Arabikuthu Song 


உலகளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகமான பின்னர் பல்வேறு தொழில்நுட்ப ரீதியான குற்றங்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. சமீபத்தில் டீப்பேக் தொழில்நுட்பம் மூலமாக நடிகைகளின் முகம் மாற்றம் செய்யப்பட்டு பதிவேற்றப்பட்ட வீடியோ பல வைரலாகி வந்தன. அதனை தடுக்கும் வழிமுறைகளையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

கடந்த 2022ம் ஆண்டு நடிகர்கள் விஜய், யோகிபாபு, மாளவிகா மோகனன், ரெடின் கிங்ஸ்லி, செல்வராகவன், விடிவி கணேஷ் உட்பட பலர் நடிக்க உருவாகிய திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி இருந்தார். படத்திற்கு அனிரூத் இசையமைத்து இருந்தார். பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நடிகர் அஜித் குமார் அரபிக்குத்து பாடலுக்கு, நடிகர் விஜயுடன் நடனம் ஆடுவது போன்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடிட் செய்யப்பட்ட வீடியோ நல்ல வரவேற்பை பெறுகிறது எனினும், அதன் தரம் மேம்படுத்தப்படும் பட்சத்தில் கட்டாயம் அது மிகப்பெரிய பின்விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.