தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக தலைமையிலான அரசு; மிக்ஜாங் புயல் விவகாரத்திலும் இப்படியா?.. முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம்.!

தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக தலைமையிலான அரசு; மிக்ஜாங் புயல் விவகாரத்திலும் இப்படியா?.. முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம்.!



DMK Leader TN CM MK Stalin Condemn to BJP Central govt 

கடந்த 2023 டிசம்பர் மாதம் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை கடுமையாக உலுக்கிய மிக்ஜாம் புயலின் காரணமாக, மக்கள் பல துயரங்களை அனுபவித்தனர். மாநில அரசு புயல் கடந்து சென்றபின்னர் மக்களுக்கு தேவையான பல உதவிகளை செய்தது. மத்திய அரசின் சார்பில் பேரிடர் குறித்த தகவல்களை பெற சிறப்புக்குழுவும் அனுப்பி வைக்கப்பட்டது. 

பேரிடரை தொடர்ந்து இழப்பு நிதியாக தமிழ்நாட்டுக்கு ரூ.37 ஆயிரம் கோடி வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. ஆனால், மத்திய அரசின் சார்பில் நிதி வழங்காமல் இருந்தது. இன்று ரூ.285 கோடி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து நிதி வழங்கப்பட்டது. 

இந்த விசயத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில், "மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய். 

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!" என தெரிவித்துள்ளார்.