"அடங்காத அசுரன் ஆட்டம் ஆரம்பம்"... பட்டையை கிளப்பும் தனுஷின் ராயன் முதல் பாடல்.! வேற லெவல்தான்!!Raayan first single released and viral

கேப்டன் மில்லர் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ராயன். தனுஷின் 50வது படமான இதனை அவரே இயக்கி நடித்துள்ளார். ராயன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் வடசென்னையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ராயனில் இணைந்துள்ள நட்சத்திரங்கள் 

மேலும் ராயன் திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், காளிதாஸ் சந்தீப் கிஷன், வரலட்சுமி சரத்குமார், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். படம் ஜூன் மாதம் வெளியாக உள்ளது.

பட்டையை கிளப்பும் பர்ஸ்ட் சிங்கிள் 

இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் அடங்காத அசுரன் இன்று வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இந்த பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தனுஷ் வரிகளை எழுதி, ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து இருவரும் இணைந்து பாடியுள்ள இந்த பாடல் பகை மற்றும் காதல் இரண்டையும் வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. இது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வைரலாகி வருகிறது.