நாளை ஓடிடியில் வெளியாகும் விஜய் ஆண்டனியின் புதிய திரைப்படம்; விபரம் உள்ளே.!Actor Vijay Antony Romeo Movie On OTT AMazon 

 

நடிகர்கள் விஜய் ஆண்டனி, மிர்னாலி ரவி, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா மற்றும் ஸ்ரீஜா ரவி உடபட பலர் நடிக்க சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ரோமியோ. 

ஏப்ரல் 11 அன்று வெளியான ரோமியோ திரைப்படம்:

விநாயக் வைத்யநாதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி எடிட்டிங்கில், பரூக் பாஷா ஒளிப்பதிவில், பரத் தனசேகர் இசையில் படம் உருவானது. கடந்த 11 ஏப்ரல் 2024 அன்று திரையரங்கில் வெளியாகிய இத்திரைப்படம் நல்ல வரவேற்பையும் பெற்றது. 

மாறனின் விமர்சனத்தால் எழுந்த சர்ச்சை:

இப்படத்தை புளு சட்டை மாறன் விமர்சனம் செய்ததை தொடர்ந்து, நடிக்க விஜய் ஆண்டனி Vs மாறன் பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதமாகவும் மாறியது. 

ஓடிடியில் வெளியீடு:

இந்நிலையில், மக்கள் மனதை கொள்ளைகொண்ட ரோமியோ திரைப்படம், 10 மே 2024 அன்று அமேசான் மற்றும் ஆஹா தமிழ் ஓடிடி தளங்களில் வெளியாகிறது. படத்தை திரையரங்கில் சென்று பார்க்காத பலரும் நேரடியாக ஓடிடி தளத்திலும் அதனை கண்டுகளிக்கலாம்.