கொரோனா வைரஸால் தாயை பிரிந்த மகளின் கதறல்! கண்கலங்க வைக்கும் வீடியோ காட்சி



girl-screaming-after-losing-mom-in-coronovirus

சீனாவில் தற்போது தலைவிரித்தாடும் பிரச்சனை கொரோனா வைரஸ். சீனாவை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்தி வருகிறது இந்த உயிர்க்கொல்லி வைரஸ். 

சீனாவில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இந்த வைரஸால் இன்னும் 14 ஆயிரத்திற்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Coronovirus

மேலும் இந்த கொடிய வைரஸ் தாக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு எந்த வித இறுதி சடங்குகளும் செய்ய அனுமதியில்லை. உயிரிழந்த இடத்திற்கு அருகிலேயே உடனடியாக புதைக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று உயிரிழந்த ஒரு பெண்ணின் உடலை அடக்கம் செய்ய ஆம்புலன்ஸின் ஏற்றி சென்றுள்ளனர். தாயை பிரிந்த சோகத்தில் அவரது மகள் "அம்மா.. அம்மா.." எனும் கதறும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ பார்ப்போர்களை கண்கலங்க வைக்கிறது.