உலகம்

உள்ளாடையுடன் மட்டும் வந்த பெண்ணை கீழே இறங்க கூறிய விமான பணியாளர்கள்! விமானத்தில் பரபரப்பு

Summary:

Girl forced to get baack in crop top

இங்கிலாந்தில், தாமஸ் குரூக் என்ற விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் ஆபாசமாக உடை அணிந்து வந்ததால், விமாண பணியாளர்களால் கீழே இறங்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளார். 

இங்கிலாந்து, பிர்கிம்காம் என்ற பகுதியை சேர்ந்த 21 வயயது இளம்பெண்ணான எமிலி என்பவர், கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்பெயின் நாட்டிற்கு செல்வதற்காக தாமஸ் குரூக் என்ற விமானத்தில் பயணிக்க வந்திருந்தார். 

விமானத்தில் ஏறும் பொழுது பேண்ட் அணிந்து வந்த அந்த பெண் மேலாடை எதுவும் அணியாமல், வெறும் உள்ளாடையுடன் மட்டும் வந்துள்ளார். இதனைக் கண்ட விமான பணியாளர்கள் அவரிடம், உங்கள் உடை மற்ற பயணிகள் சங்கடப்படும்படி உள்ளதாக கூறி, அவரை மேலாடை அணியும்படி கேட்டுள்ளனர். 

இதற்கு அந்த பெண், விமாண பயணத்தின் போது இந்த மாதிரி தான் உடை அணிய வேண்டும் என்ற விதிமுறை எதுவும் கிடையாது, நான் இப்படியே தான் பயணம் செய்வேன் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் பணியாளர்களோ, மேலாடை அணியாவிட்டால் விமானத்தை விட்டு கீழே இறங்கும்படி எமிலியிடம் கூறியுள்ளார். 

ஆனால், அந்த பெண்ணோ கீழே இறங்க மறுத்துள்ளார். மேலும், விமானத்தில் இருந்த மற்ற பயணிகளிடம், எமிலி தன்னுடைய உடையை பார்த்தால் உங்களுக்கு சங்கடமாக இருக்கிறதா என கேட்டுள்ளார். ஆனால் யாரும் அதனைப் பற்றி எதுவும் கூறவில்லை. 

ஆனால், ஒரே ஒரு பயணி மட்டும் எமிலியை கெட்ட வார்த்தையால் திட்டி மேலாடை அணியும்படி கேட்டுள்ளார். அவர் திட்டுவதை பார்த்த விமாண பணியாளர்கள் எதுவும் கண்டுகொள்ளவில்லை. இறுதியில் எமிலி, தன் உறவினரின் மேலாடையை அணிந்துகொண்டு பயணத்தை தொடர்ந்துள்ளார். இவை அணைத்தையும் எமிலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Advertisement