90 அடி உயர கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்த இளம் பெண்..! கீழே விழுந்தவர் தானாக எழுந்து நடக்கும் அதிசயம்..!

90 அடி உயர கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்த இளம் பெண்..! கீழே விழுந்தவர் தானாக எழுந்து நடக்கும் அதிசயம்..!



girl-falling-from-90-feet-height-video-goes-viral

ரஷ்ய நாட்டில் உள்ள ஜலுசின்க் என்னும் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்துவந்த 27 வயது இளம் பெண் ஒருவர் சுமார் 90 அடி உயர கட்டிடத்தில் இருந்து திடீரென கீழே விழுந்தார். அவர் கீழே விழும் காட்சிகள் வீடியோவாக பதிவாகி இணையத்தில் வெளியாகிவருகிறது.

கீழே விழுந்த அந்த பெண், கீழே  விழுந்த வேகத்தில் உயிர் இழந்திருப்பர் அல்லது கை கால்கள் முறிந்து பலத்த காயம் ஏற்பட்டிருக்கும் என அனைவரும் நினைத்த நிலையில் கீழே விழுந்து சிறிதுநேரம் அசைவின்றி இருந்த அவர் சிறிது நேரத்தில் தானாக எழுந்து அமர்ந்துள்ளார்.

Mystery

பின்னர் தானாகவே எழுந்து நடந்துசென்று அருகில் இருந்தவர்களிடம் ஆம்புலன்ஸ் வாகனத்தை வரச்சொல்லுமாறு கேட்டுள்ளார். பின்னர் மருத்துவமனையில் அணும்பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை சோதித்த மருத்துவர்கள், அவருக்கு நிறைய உள்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் எந்த விதமான எலும்பு முறிவும் ஏற்படாதது ஆச்சரியமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.