
உலகில் புகழ் பெற்ற சவானா வகை பூனைக்குட்டியை வாங்க ஆசைப்பட்டு கடைசியில் புலிக்குட்டியை வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டு தம்பதியினர் உலகில் புகழ் பெற்ற சவானா வகை பூனைக்குட்டியை வாங்க ஆசைப்பட்டு கடைசியில் புலிக்குட்டியை வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் லே ஹாவ்ரே நகரைச் சேர்ந்த தம்பதிகள் தோற்றத்தில் புலிக்குட்டியை போலவே இருக்கும் மிக பிரபலமான சவானா வகை பூனைக்குட்டியை வாங்க ஆசைப்பட்டு 3000 யூரோக்கு ஆன்லைனில் ஆடர் செய்துள்ளனர்.
அந்த தம்பதியினரின் ஆடர் வீட்டிற்கு வந்ததை அடுத்து அதனை ஆசையாக வாங்கி வளர்த்துள்ளனர். ஆனால் நாளடைவில் பூனையின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
காவல் துறையினர் விலங்கியல் நிபுணர்களுடன் வந்து சோதனை செய்த போது தான் தெரிந்தது அது பூனைக்குட்டி இல்லை சுமத்ரன் வகை புலிக்குட்டி என தெரியவந்துள்ளது. இதனை கேட்டு அந்த தம்பதியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Advertisement
Advertisement