உலகம்

ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்..! சுட சுட உடல் வெந்து 5 பேர் துடி துடித்து பலி..!

Summary:

Five people including a mother and her five-year-old daughter are boiled alive

ரஷ்யா நாட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த தாய் மற்றும் அவரது 5 வயது குழந்தை உட்பட 5 பேர் வெந்நீரில் வெந்து உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் பெர்ம் (perm)என்ற நகரில் அமைத்துள்ள இந்த ஹோட்டல். குடியிருப்பு தளத்தின் அடியில் அமைந்திருக்கும் இந்த ஹோட்டல் அறையில் வெந்நீர் குழாய் திடீரென உடைந்து அதில் இருந்த வெந்நீர் ஹோட்டல் அறை முழுவதும் பரவியுள்ளது.

இந்த எதிர்பாராத விபத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த 5 பேர் வெந்நீரில் மூழ்கி, உடல் வெந்து பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர். வெந்நீர் குழாய் எப்படி உடைந்தது? விபத்து ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதனிடையே இந்த கொடூர சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,


Advertisement