உலகம் லைப் ஸ்டைல்

வலையில் சிக்கிய புறா தலை கொண்ட விசித்திர மீன்..! சீனாவில் கண்டுபிடிப்பு..!

Summary:

Fish head looks like pura head video goes viral

உலகின் ஏதாவது ஒரு இடத்தில் தினம் தினம் வித்தியாசமான நிகழ்வுகள் ஏதாவது நடந்துகொண்டேதான் இருக்கிறது. சமூக வலைத்தளங்களின் வளர்ச்சிக்கு பிறகு இதுபோன்ற சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நொடிப்பொழுதில் உலகம் முழுவதும் ட்ரெண்டாகிவிடுகிறது.

அந்த வகையில் சீனாவில் உள்ள கியுஸூ மாகாணத்தில் உள்ள குயாங் நகரில் வித்தியாசமான மீன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீனவர் ஒருவர் வலையில் புறாவின் தலைபோல் அமைப்பு கொண்ட விதியசமான மீன் ஓன்று சிக்கியுள்ளது. வித்தியாசமான தோற்றம் கொண்ட அந்தத் மீனைக் கண்ட அவர் உடனடியாக இது குறித்து அங்கிருப்பவர்களிடம் கூறியுள்ளார்.

புறாவின் தலைபோல் மீனா? வாங்கடா பாக்கலாம் என மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது. தண்ணீரிலே வைக்காமலே வெளியில் வைத்து பார்க்கப்பட்டதால், இந்த மீன் சிறிது நேரத்திலே உயிரிழந்துள்ளது. இருப்பினும் இந்த வகை விசித்திர மீனைக் கண்ட அப்பகுதி மக்கள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.


Advertisement