என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
ஓடும் ரயிலில் பற்றி எரிந்த தீ! 50க்கு மேலானோர் பலி! தீ ஏற்பட்டதற்கான அதிர்ச்சி காரணம்!

பாகிஸ்தானில் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 50க்கு மேலானோர் உடல் கருகி பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தானில், கராச்சிக்கும், ராவல்பிண்டிக்கும் இடையே தேஜ்காம் எக்ஸ்பிரஸ்என்ற ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தேஸ்காம் ரயில் கராச்சியில் இருந்து ராவல்பிண்டிக்கு சென்று கொண்டிருந்தபோது, இன்று அதிகாலையில் திடீரென பயணிகள் உள்ள பெட்டியில் திடீரென தீ பற்றி எரிந்தது. மேலும் அடுத்தடுத்த பெட்டிகளுக்கு தீ பரவி, ரயில் நிறுத்தப்பட்டது.
இந்த தீ விபத்தில் 16 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
So tragic 🔥😕🔥
— Danyal Gilani (@DanyalGilani) October 31, 2019
Death toll in Tezgam fire incident reportedly crossed 60. 😐 pic.twitter.com/XcdTh5RnAC
விசாரணையில், ரயிலில் சென்ற பயணி வைத்திருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து வெளியான முதற்கட்ட தகவலின்படி, இந்த விபத்தில் 50க்கு மேலானோர் உயிரிழந்தாகவும், மேலும் பலர் காயமடைந்தாக தகவல் வெளியாகியுள்ளது.