அம்மா பாவம்பா..! கெஞ்சிய மகள்..! முகத்தில் பெட்ரோல் ஊத்தி தீ வைத்த கொடூர தந்தை.!

அம்மா பாவம்பா..! கெஞ்சிய மகள்..! முகத்தில் பெட்ரோல் ஊத்தி தீ வைத்த கொடூர தந்தை.!


Father fire own daughter for family fight

உக்ரைன் நாட்டில் பெற்ற தந்தையே தனது மகளின் முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் நடாலியா. இவரது மகள் பெயர் அண்ணா கிறிஷ்டிகா வயது 16. அண்ணாவின் தந்தை குடிக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் அண்ணாவின் தந்தைக்கும், தாய்க்கும் வீட்டில் கடுமையான சண்டை நடந்துள்ளது. தனது தாயை - தந்தை அடிப்பதை பார்த்து சகித்துக்கொள்ள முடியாத அண்ணா தனது தந்தையை பின்புறமாக சென்று கட்டி பிடித்துக்கொண்டார். அண்ணாவின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாத அவரது தந்தை ஒருகட்டத்தில் சண்டையை விட்டுவிட்டு கோவமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

Crime

சண்டை போட்ட கோவத்தில்தான் அவர் வெளியே போகிறார் என அனைவரும் நினைத்த நிலையில், சிறிது நேரத்தில் மீண்டும் வீட்டிற்கு வந்த அவர் அண்ணாவின் அறையை பூட்டிவிட்டு அறைக்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் இருந்து அண்ணா தப்பிக்க முயற்சி செய்த போது அவரது முகத்திலும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதில், முகம் முழுவதும் எறிந்த நிலையில், அலறி துடித்த அண்ணாவை மீட்டு அவரது சகோதரர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அண்ணாவின் தந்தை மீது பல குற்றங்களின் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.