"குசு"வை ஜாடியில் அடைத்து கோடிக்கணக்கில் விற்று வருமானம் பார்த்த நடிகை..! இதையுமடா வாங்குவீங்க?.. எதுக்குடா?.!!



famous-90-day-fiance-star-actress-stephanie-matto-sales

ஜாடியில் குசுக்களை பிடித்து விற்பனை செய்து, வாரத்திற்கு 38,000 டாலர் சம்பாரித்த ரியாலிட்டி ஸ்டாரின் பகீர் வருமான பின்னணி குறித்த தகவல் தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பிரபல யூடியூபராகவும், மாடல் அழகியாகவும் பிரபலமடைந்தவர் ஸ்டெபானி மோட்டோ (Stephanie Matto). இவர் தான் தனது குசுக்களை ஜாடியில் பிடித்து விற்பனை செய்து, வாரத்திற்கு 38,000 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.38,30,984) பணம் சம்பாரித்து வருகிறார். இவரது வாயுக்காற்று ஜாதிக்கு £ 756 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.76,216) என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

குறைந்த நாட்களில் எப்படி இவ்வுளவு வருமானம் பெற்றுள்ளார் என்று எழுந்த கேள்விக்கு, தனது வருமான யுக்தியை நடிகை கூறியபின்னரே பலருக்கும் அது தொடர்பான உண்மை தெரியவந்துள்ளது. மேலும், வாரத்திற்கு 50 ஜாடிகள் நிறைந்த தனது வாயுக்காற்றை பிடித்து ஜாடியில் வைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.

Fiance Star

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், சம்பவத்தன்று அதிகளவு முறையற்று உணவுகளை சாப்பிட்டதால் நடிகைக்கு வயிற்று வலி அதிகமாக ஏற்பட்டுள்ளது. மேலும், அது பக்கவாதமாக இருக்கலாம், மாரடைப்பாக இருக்கலாம் என்று எண்ணி வருந்திய நடிகை, ஒருகட்டம் மேலே சென்று இறக்கப்போகிறேன் என்று நினைத்துள்ளார். 

அவரது வயிறும் தனது மாற்றத்தை உணர்த்தி, சுவாசிக்க இயலாத அளவு உள்ள துர்நாற்றத்தை மலத்துவாராம் வழியே வெளிப்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து, விரைந்து மருத்துவமனைக்கு சென்ற நடிகை மருத்துவர்களிடம் விஷயத்தை கூற, அவர்கள் இது சாதாரண வாயு பிரச்சனை. கண்டதை சாப்பிட்டதால் ஏற்பட்டுள்ளது என்று கூறி மருந்துகளை பரிந்துரை செய்துள்ளனர்.

Fiance Star

உலகளவில் சம்பாத்தியம் என்பது ஒவ்வொரு தனிநபராலும் ஒவ்வொரு வழிகளில் பெறப்பட்டு வருகிறது. ஆனால், தனது குசுவை விற்பனை செய்து சம்பாத்தியம் பார்த்த நடிகையின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனை பலரும் வாங்கியுள்ளார்கள் என்பது தான் ஆச்சர்யமான, விசித்திரமான ஒன்று. 

ஆராய்ச்சி ஏதும் பண்ணுவாங்க போல.. நமக்கெதுக்கு வம்பு.