அச்சச்சோ.. இந்த நாட்டுக்கு போனீங்களா?.. அங்கு சென்று வந்தவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி.!

அச்சச்சோ.. இந்த நாட்டுக்கு போனீங்களா?.. அங்கு சென்று வந்தவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி.!



england-confirm-nigeria-return-man-affect-chickenpox

பிரிட்டன் நாட்டினை சேர்ந்தவர் நைஜீரியா வந்திருந்த நிலையில், அவருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது. இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது ஆகும். இந்த நோய் நைஜீரியா சென்று வந்தவருக்கு உறுதியாகியுள்ளதாக பிரிட்டன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

இது அரிய வகை வைரஸாக கருதப்படும் நிலையில், மனிதர்களுக்கு எளிதில் பரவாது என்றும், அவ்வாறு பரவினால் சில வாரங்களில் குணமடைந்துவிடும் என்றாலும், சில காலங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இந்த நோய் மக்களுக்கு பரவும் ஆபத்து குறைவு என்றும், இருப்பினும் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் காரணமாக தலைவலி, காய்ச்சல், தசைவலி, முதுகு வலி, குளிர், சோர்வு போன்றவை ஏற்பட்டு, உடலில் அரிப்பில் தொடங்கி முகம் மற்றும் உடல் பகுதியில் புண்கள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.