உணவு என நினைத்து 6 வயது சிறுவனின் கைய்யை கடித்த டால்பின்... வைரல் வீடியோ..

உணவு என நினைத்து 6 வயது சிறுவனின் கைய்யை கடித்த டால்பின்... வைரல் வீடியோ..


dolphin bite 6 year old boy hand

6 வயது சிறுவன் ஒருவரின் கையை டால்பின் கடித்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

உக்ரைன் நாட்டின் ஒடெசா (Odessa) என்ற பகுதியில் அமைத்துள்ள டால்பின்கள் வளர்க்கப்படும் இடம் ஒன்றுக்கு 6 வயது சிறுவன் ஒருவன் தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளான். டால்பின்களை பார்த்து விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுவன், தனது அருகே வந்த டால்பின் ஒன்றுக்கு கைகொடுக்க முயற்சி செய்துள்ளான்.

அப்போது அந்த டால்பின் அந்த சிறுவனின் கையை கடித்துவிட்டது. சிறுவன் வலியால் அலறியதை அடுத்து அவரது பெற்றோர் சிறுவனை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு சிறுவனின் கையில் தையல்கள் போடப்பட்டன.

சிறுவனின் கை மட்டும் தனியாக தெரிந்ததால், அது உணவு என்று நினைத்து டால்பின் கடிக்க முயன்றிருக்கலாம் என அதன் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார் . இந்நிலையில் டால்பின் அந்த சிறுவனை கடித்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.