புன்னகையுடன் மேல்நோக்கி பார்த்து எனக்கு அவர்கள் தெரிகிறார்கள்! மரணப் படுக்கையில் தாய் கண்ட அந்த ஒரு காட்சி.... நிலைகுலைந்து போன மகள்கள் பதிவு செய்த வீடியோ..!!!



daughter-records-mothers-final-moments-angels-video-vir

ஒரு வயதான தாயின் இறுதி தருணங்களை மகள் அலைபேசியில் பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பதிவான சில காட்சிகள் பார்ப்பவர்களை நெகிழச்செய்ததோடு, புதிராகவும் தோன்றியுள்ளது. குறிப்பாக, தாய் கூறிய வார்த்தைகள் பலரிடமும் கேள்விகளை எழுப்பியுள்ளன.

மேல்நோக்கி பார்த்த தாய்

படுக்கையில் அமைதியாக இருந்த அந்தத் தாய், அறையில் இருந்தவர்களைப் பார்க்காமல் மேல்நோக்கி கண்களை நிலை குத்தியிருந்தார். முகத்தில் ஒரு மென்மையான புன்னகையுடன், அவர் “Angels” என்று மெதுவாக சொன்னதாக வீடியோவில் கேட்கிறது. அந்த தருணம் அங்கு இருந்தவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: உயிரியல் பூங்காவில் வழுக்கி விழுந்த ஊழியர்! அதை பார்த்து விழுந்து புரண்டு சிரித்த பாண்டா கரடி....இறுதியில் அது என்ன பண்ணுதுன்னு பாருங்க! வைரல் வீடியோ!!!

மகளுடன் நடந்த உரையாடல்

இதையடுத்து, அருகில் இருந்த மகள் அமைதியாக “அவர்கள் உனக்கு மகிழ்ச்சி தருகிறார்களா?” என்று கேட்டார். அதற்கு தாய் மெதுவாக தலையசைத்து சம்மதம் தெரிவித்தார். தொடர்ந்து “எத்தனை பேர் இருக்கிறார்கள்?” என்ற கேள்விக்கு, “நான்கு பேர்” என்று மிக மெதுவாக பதிலளித்தார்.

வீடியோ கிளப்பிய கேள்விகள்

இந்த காட்சிகள் இணையத்தில் பரவியதையடுத்து, இறுதி நேரங்களில் மனிதர்கள் காணும் அனுபவங்கள் குறித்து பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர். அது மனதில் உருவாகும் கற்பனையா, அல்லது வேறு ஏதோ உணர்வு சார்ந்த அனுபவமா என்ற விவாதம் தொடர்கிறது.