என்னை கட்டிப்பிடிம்மா... உயிருக்கு போராடும் மகளும் - தாயும்.. கண்கலங்க வைக்கும் காணொளி....!

என்னை கட்டிப்பிடிம்மா... உயிருக்கு போராடும் மகளும் - தாயும்.. கண்கலங்க வைக்கும் காணொளி....!


Daughter and mother crying speech

உலகளவில் நோய் என்பது தீராத பிரச்னையாகியுள்ளது. சிறு வயதுள்ள குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் பலவகை நோய்களின் தாக்கத்தை கடந்து செல்கின்றனர். இதில், சில இறப்பில் முடிகிறது. அந்த வகையில், பச்சிளம் சிறுமி நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார். அவருக்கு சிகிச்சை நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தனது உடல்நிலையை அறிந்துகொண்ட சிறுமி தனது தாயுடன் உரையாடும் கண்கலங்க வைக்கும் காணொளி வைரலாகி வருகிறது.. 

அந்த காணொளியில் தாயும் - மகளும் பேசியவாதவது., 

மகள்: அப்பா, ரேச்சல் (அம்மா) நீங்க அழுவுறீங்களா?.. 

அம்மா: இல்லை. நாங்க சந்தோசமா இருக்கோம்..

மகள்: அம்மா உங்களுக்கு நன்றி. என்னை பார்த்துக்கொண்டதற்கு.

அம்மா: அதெல்லாம் ஒன்றும் இல்லை. நீ எனக்கு மகள். கவலை வேண்டாம். நல்ல உடல்நலம் பெறுவாய்.

மகள்: ஆமாம்., நீங்கள் எனது அம்மா.. I Love You..

அம்மா: Love You Too..

மகள்: நீங்கள் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். நான் நலமாக வருவேன் என நம்புகிறேன். என்னை கட்டிபிடிம்மா..

அம்மா: வரேன் என் தங்கமே..

இந்த வீடியோ எப்போது எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால், உயிருக்கு போராடும் மகளும், தாய் - தந்தையும் கண்ணீருடன் மகளுக்கு தாயும், தாய்க்கு மகளும் தைரியம் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.