பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பின் தூக்கு தண்டனை ரத்து..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பின் தூக்கு தண்டனை ரத்து..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!



Court canceled musharap hanging punishment

2001-ம் ஆண்டு முஷரப் பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதியாக இருந்தபோது ராணுவ புரட்சியை ஏற்படுத்தி அதனம்மூலம் நவாஸ் ஷெரீப்பின் ஆட்சியை கைப்பற்றினார். மேலும்,  2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ந் தேதி பாகிஸ்தான் நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார். டிசம்பர் 15-ந் தேதி வரை நெருக்கடி நிலை அமலில் இருந்தது.

இதன்பிறகு 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நவாஸ் ஷெரிப் வெற்றி பெற்று மீண்டும் பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றதும் முஷரப் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தார். இதனை அடுத்து வினோத நோயால் பாதிக்கப்பட்ட முஷரப் துபாய் சென்று சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் மீண்டும் நாடு திரும்பவில்லை.

Musharap

இந்நிலையில் முஷாரப் மீது பதிவு செய்யப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது அந்நாட்டு நீதிமாற்றம். ஒருவேளை தூக்கிலிடும் முன்பே முஷாரப் இறந்துவிட்டால் அவரது உடலை பொது இடத்தில் மூன்று நாட்களுக்கு கட்டி தொங்கவிட வேண்டம் எனவும் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி லாகூர் உயர்நீதிமன்றத்தில் முஷாரப் தரப்பில் மேல்முறையீட்டு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் முடிவில், முஷாரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஐகோர்ட் நீதிபதிகள் ரத்து செய்துள்ளன்னர்.