கொரோனா வைரஸ் தாக்குதல்! மீண்டும் உயர்ந்துவரும் பலி எண்ணிக்கை!
கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.
சீனாவில் ஹுபெய் மாகாணத்தில் உள்ள உஹான் நகரில் தோன்றிய கொரனோ வைரஸ் தற்போது அதிதீவிரமடைந்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இதுவரை சீனாவில் 12,000 பேருக்கு மேல் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உயிரை பறிக்கும் இந்த கொடிய கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் இந்த வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. மேலும் இதுவரை 12,000 பேருக்கு மேல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.