உலகம் மருத்துவம்

ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்.! பிரிக்கப்பட்ட தலைகள்.! 50 மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை.! இறுதியில் மகிழ்ச்சியடைந்த தாய்!

Summary:

ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் அறுவை சிகிச்சை மூலமாக பிரிக்கப்பட்டு அவர்களின் சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் அறுவை சிகிச்சை மூலமாக பிரிக்கப்பட்டு அவர்களின் சொந்த நாட்டுக்கு செல்வதால் இரட்டையர்களை பெற்றெடுத்த தாய் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் மூலமாக தலைகள் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். சஃபா மற்றும் மார்வா பீபீ ஆகிய இருவருக்கும் 50 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர்கள் தங்களின் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு தற்போது திரும்பியுள்ளனர். தீவிர அறுவை சிகிச்சையில் வெற்றி கண்டு பிரிக்கப்பட்ட இரட்டையர்களின் தாயார், தனது மகள்கள் சொந்த ஊருக்கு செல்வதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.


Advertisement