நடக்க முடியாமல் தள்ளாடி திடீரென சரிந்து விழுந்த ஆசிரியர்! ஓடி வந்து தாங்கி பிடித்து... கதறி அழுத மாணவர்கள்! மண்டியிட்டு உயிர்பிழைக்க கடவுளிடம் பிரார்த்தனை! இறுதியில் நடந்த ட்விஸ்ட்...வைரல் வீடியோ!!!
சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில், பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை திடீரென மயங்கி விழுந்தார். இதைக் கண்ட மாணவர்கள் பதற்றமடைந்து அவரைச் சுற்றி அழுத காட்சி இணையத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. ஆசிரியர் தற்போது நலமாக உள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வகுப்பறையிலேயே உடல்நிலை பாதிப்பு
நேற்று காலை வழக்கம்போல் வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியைக்கு திடீரென கடும் சோர்வு ஏற்பட்டது. தகவலின்படி, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதும், உடல் உபாதைகளும் காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதோடு, தொடர்ந்து ஆறு வகுப்புகளை கவனித்ததால் உடல் மேலும் தளர்ந்திருந்தது.
மாணவர்கள் அதிர்ச்சி… உடனடி உதவி
ஒரு கட்டத்தில் நிலைகுலைந்த ஆசிரியர் வெளியேற முயன்றபோது தரையில் சரிந்தார். இதைப் பார்த்த மாணவர்கள் இருக்கைகளை விட்டு ஓடி வந்து அவரைத் தாங்கிப் பிடித்தனர். சிலர் தண்ணீர் கொண்டு வர, மற்றவர்கள் உதவி கேட்டு வெளியே ஓடினர். அந்த நேரத்தில் வகுப்பறை முழுவதும் பதற்ற நிலை நிலவியது.
இதையும் படிங்க: குடிபோதையில் போட்ட கும்மாளம்.....நொடியில் உயிரே போயிருக்கும்! அலறிய மக்கள் கூட்டம்! இறுதியில் இளையர்களின் துணிச்சல்....திக் திக் வீடியோ..!!!
“நான் உயிரிழந்துவிட்டேன் என நினைத்து அழுதார்கள்”
பின்னர் விழித்துக் கொண்ட ஆசிரியர், மாணவர்களின் எதிர்வினையை நினைத்து நெகிழ்ந்ததாக கூறினார். “என்னை அப்படியே கிடப்பதை பார்த்ததும், நான் இறந்துவிட்டதாக நினைத்து குழந்தைகள் கதறி அழத் தொடங்கினர். சிலர் மண்டியிட்டு பிரார்த்தித்ததும் மனதை உருக்கியது,” என்று தெரிவித்தார். இந்த மாணவர்கள் உணர்ச்சி நிறைந்த தருணம் வீடியோவாக வெளியானது.
தற்போது அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி, ஆசிரியர்-மாணவர் உறவின் அழகை பலரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, Low Blood Sugar காரணமாக ஏற்பட்ட இந்த நிகழ்வு, ஆசிரியர்களின் வேலைச்சுமை குறித்தும் விவாதத்தை தூண்டியுள்ளது.
昨天上午,中国黑龙江一中学课堂出现感人一幕。老师出现低血糖症状,摇摇晃晃走出教室,站着的同学率先跑出去扶助。老师自述,“低血糖、生理期,连着上了六节课晕过去了,我班孩子以为我死了,一群孩子围着我哭,校长来了说,还有跪着磕头给我祈福的。” pic.twitter.com/Iaum4gqfJP
— 作家崔成浩 (@cuichenghao) April 16, 2026
இதையும் படிங்க: காளையின் தலையில் சிக்கிய தண்ணீர் தொட்டி.....சந்தையில் கண்டப்படி சீறிய காளை! துணிச்சலாக களத்தில் குதித்த வாலிபர்கள்! வைரல் வீடியோ!!!