இன்ஸ்டா மூலம் தொடங்கிய காதல்...! திருமணம் செய்ய காதலன் வீட்டு வாசலில் தர்ணா... இளம்பெண் செய்த பரபரப்பு செயல்..!!!



kolar-woman-protests-at-lovers-house

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் அருகே, காதலித்து திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக இளைஞர் மீது குற்றம்சாட்டி, அவரது வீட்டு வாசலில் இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டார். இன்ஸ்டாகிராம் மூலம் தொடங்கிய பழக்கம் காதலாக மாறிய நிலையில், இளைஞர் திருமணப் பேச்சைத் தவிர்த்து வருவதாகப் பெண் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் தொடங்கிய காதல்

சிக்ககடத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது சிவ ரஞ்சனிக்கும், ஹனுமனாயக்கனஹள்ளியைச் சேர்ந்த 24 வயது பிரித்விராஜுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது பிரித்விராஜ், சிவ ரஞ்சனியைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்ததாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: கால்வாயில் சாக்கு மூட்டையில் கிடந்த சடலம்..! திறந்த போது போலீஸ்கு காத்திருந்த அதிர்ச்சி... பகீர் வீடியோ..!!!

திருமணப் பேச்சைத் தவிர்த்ததாகப் புகார்

சமீபகாலமாக பிரித்விராஜ் திருமணம் தொடர்பாகப் பேசுவதைத் தவிர்த்து வந்ததாகவும், தனது அலைபேசியை அணைத்துவிட்டு தொடர்புகொள்ள முடியாதபடி இருந்ததாகவும் சிவ ரஞ்சனி குற்றம்சாட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்டதாகக் கூறும் அவர், தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரித்விராஜின் வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

மாலூர் போலீசார் விசாரணை

வீட்டின் முன்பு இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மாலூர் போலீசார் அங்கு சென்று சிவ ரஞ்சனியிடம் விவரங்களைக் கேட்டறிந்தனர். புகாரின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டதா அல்லது பிரித்விராஜிடம் விசாரணை நடத்தப்பட்டதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

 

இதையும் படிங்க: அதிர்ச்சி! கறுப்பின இளைஞருக்கு நடந்த கொடூரம்! 4 வெள்ளை நிற இளைஞர்கள் செய்த அதிர்ச்சி காரியம்... மகனின் கோலத்தைப் கண்டு அலறிய தந்தை..! பகீர் வீடியோ..!!!