கொரோனாவை தடுத்துநிறுத்திய சீனா! சீனாவில் மேற்கொண்ட கடும் நடவடிக்கை!

கொரோனாவை தடுத்துநிறுத்திய சீனா! சீனாவில் மேற்கொண்ட கடும் நடவடிக்கை!


China stopped corona

சீனாவில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சீனாவின் உகான் நகரை பிறப்பிடமாக கொண்ட கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு சீன அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.  சீனாவின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால், அந்நாட்டில் கொரோனா வைரசின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத்தொடங்கியது.

corona

சீனாவில்  கொரோனாவை தடுக்க மேற்கொள்ளப்பட்டுவரும் தீவிர நடவடிக்கையால், புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியது. சீனாவில் புதிதாக உள்ளூரில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. வெளிநாட்டிலிருந்து வந்தவர்களே புதிதாக தொற்றுக்கு ஆளானவர்கள் என்று சீனா தெரிவித்தது. 

இந்த நிலையில், சீனாவில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. அதேபோல், உயிரிழப்புகளும் நேற்று ஏற்படவில்லை என சீன அரசு தெரிவித்துள்ளது. தபோதைய நிலவரப்படி சீனாவில் 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களில் 76,052 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.